சென்னை
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று காலையும் மழை விடாமல் பெய்து வருகிறது. பல இடங்களில் மழை நீர் வெள்ளமாக தேங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இந்த மழை மேலும் தொடர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.. இதையொட்டி தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அவற்றில் ஒன்றாக கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், மயிலாடுதுறை, நாமக்கல் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தவிர விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.