சென்னை:
தீபாவளி விற்பனையில் சாதனை ஆவின் படைத்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு ஆவின் பொருட்கள் இதுவரை ரூ.83 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. இதுவரை ஆவின் வரலாற்றில் இல்லாத அளவில் தீபாவளி விற்பனை அமைந்துள்ளது. இதுவரை ஆவின் வரலாற்றில் இல்லாத அளவில் 83கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டு 600 டன் ஆவின் நெய் விற்பனையாகியுள்ளது இந்த ஆண்டு 900 டன் நெய் விற்பனையாகி உள்ளது.ஆவின் இனிப்பு வகைகளை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு 270 டன் விற்பனை ஆகியுள்ளது.

இந்த ஆண்டு 400 டன் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு 55 கோடியாக இருந்த ஆவின் விற்பனை, இந்த ஆண்டு 83 கோடிக்கு விற்பனையாகிள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை 330 கோடி அளிக்கப்பட்டுள்ளது.அரசு துறைகளை சார்ந்த அனைவரும் ஆவின் இனிப்புகளை வாங்கி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.