டில்லி

த்திய அரசு பெட்ரோல் மற்றும் டீச்ல் மீதான வரியைக் குறைத்து அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்து வருகின்றன.   தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.

இதனால் இந்தியாவில் தினசரி  பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறுமுகமாகக் காணப்படுகிறது.   இந்த விலையேற்றத்துக்கு மற்றும் ஒரு காரணம் மத்திய மாநில அரசுகளின் அதிகமான வரியும் ஆகும் என கூறப்படுகிறது.   இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் மக்கள் கடும் துயரம் அடைந்து வ்ருகின்றன்ர்.

இந்நிலையில் மத்திய அரசு இன்று பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியைக் குறைத்து அறிவித்துள்ளது.   அதன்படி பெட்ரோலுக்கு 5 ரூபாயும் டீசலுக்கு 10 ரூபாயும் வரி குறைக்கப்பட்டுள்ளது.  இந்த வரிக் குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.