சென்னை: பக்தர்களுக்கும், தெய்வத்துக்கும் இடையே இடைத்தரகர்கள் எதற்கு? அவர்கள் தேவை யில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பூலோக சொர்க்கம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறி பேருந்து நிலையத்திலேயே இடைத்தரகர்களால் ரூ.500 வசூலிக்கப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் புகார் அளித்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், கடவுளுக்கும், பக்தர்களுக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இட மில்லை, ஆண்டவன் முன் அனைவரும் சமம் எனவும் தெரிவித்தனர். மேலும், இந்த புகாரை மனுவாக தாக்கல் செய்யும்படி, மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கு உத்தரவிட்டு, வி.ஐ.பி. தரிசனத்தை முறைப்படுத்துவது குறித்தும் அந்த அறிக்கையில் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளனர்.றம் உத்தரவிட்டுள்ளது.