பெங்களூரு: கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

46 வயதே ஆசூன கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார்  மாரடைப்பு காரணமாக  பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் காலமானார்.

ஆனால்,அடுத்த சில மணி நேரத்தில், புனித் ராஜ்குமாரின் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது என்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது எனவும் தகவல் வெளியான நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.