கொல்கத்தா: 
பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு  தெரிவித்த கொல்கத்தாவில் பெட்ரோல் பங்க் தனது விற்பனையை 30 நிமிடங்களுக்கு நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க பெட்ரோல் பங்க் டீலர்கள் சங்கம்,  பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை 30 நிமிடங்களுக்கு நிறுத்தியது. மேலும் கொல்கத்தா மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் விளக்குகளை அணைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பேசிய மேற்கு வங்க பெட்ரோல் பங்க் டீலர்கள் சங்கம் நிர்வாக உறுப்பினர் அனிர்பன் சாஹா,  கொல்கத்தா, வடக்கு 24 பர்கானாஸ், தெற்கு 24 பர்கானாஸ், ஹவுரா & ஹூக்லி ஆகிய இடங்களில் டீசல் விலை இன்று 100 ரூபாயை தாண்டியுள்ளது. விலைவாசி உயர்வால், விற்பனை அளவு குறைந்து வருகிறது. எனவே, எங்கள் லாபமும் குறைந்து வருகிறது என்று கூறினார்.