சென்னை: அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்த நடிகர் மன்சூர் அலிகான் வீட்டுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சர்ச்சைக்கு பெயர் போனர் நடிகர் மன்சூர் அலிகான். பல கட்சிகளில் சேர்ந்துவிட்டு, பின்னர் அது பிடிக்காமல் தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும் அலப்பறை செய்தவர். பணமதிப்பிழப்பின்போது, ரூ.2000 நோட்டை பிச்சைக்காரன் கூட வாங்கமாட்டான் என்று கூறி சர்ச்சையில் சிக்கியவர், பின்னர் விவேக் மரணம் குறித்தும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இனால், அவர் கைது செய்யப்படும் நிலை உருவானது.

ஜனநாயகத்தைத்தான் நாம் பாலோ அப் செய்கிறோம். ஒரு ஆள் தப்பு செய்தால் தப்புன்னு சொல்லனு என்று குரல் கொடுத்து, நல்லவர்போல தன்னை காட்டிக் கொண்டவர், தற்போது அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

நடிகர் மன்சூரலிகான் வீடு சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் உள்ளது. இந்த வீட்டின் மற்றொரு பகுதி, அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலம் 2,500 சதுர அடியை ஆக்கிரமித்து மன்சூர்அலிகான்  வீடு கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டதால், நீதிமன்ற உத்தரவின்படி அவரது வீட்டுக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று அவரது வீட்டுக்கு சென்றை மாநகராட்சி மண்டல அதிகாரிகள் 8 பேர், அவரது வீட்டுக்கு சீல் வைத்ததனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலம் தொடர்பான வழக்கு விவரம்:

நடிகர் மன்சூஅலிகான் 18 ஆண்டுகளுக்கு முன்பு சூளைமேடு பெரியார் பாதையில்  2,400 சதுர அடி நிலத்தை வாங்கியுள்ளார். இந்த நிலத்தை அவருக்கு அதன் முன்னாள் உரிமையாளர்  அவரிடம் விற்றதாகவும், இது அரசு புறம்போக்கு நிலம் என்பது தனக்கு பிறகுதான் தெரியவந்தது என்றும் மன்சூர் அலிகான் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும்,தினத்தை தன்னிடம் நிலத்தை விற்ற  நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 2019ம் ஆண்டு  மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.  பின்னர் மன்சூர் அலிகான் 2019ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் .

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மன்சூர் அலிகான் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நீதிமன்றம் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க கோரி உத்தரவின் பெயரிலேயே நடிகர் மன்சூர் அலிகான் வீடு பூட்டி சீல் வைக்கப்பட்டதுடன் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.