johnson

மிசெளரி, அமெரிக்கா
ஜாக்குலின் பாக்ஸ் என்ற பெண்மணி பல ஆண்டு காலமாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்த குழந்தை டால்க் மற்றும் ஷவர் டு ஷவர் போன்ற பொருட்களை பயன்படுத்தியதால் தமக்கு கருப்பை புற்றுநோய் உண்டாகியதாகக் கூறி அன்நிறுவனத்தின் மீது ஒரு வழக்கு தொடர்ந்தார். தம் 62 ஆம் வயதில் இறந்தும் விட்டார். பல ஆண்டு காலம் சென்ற வழக்கு, கடந்த திங்கள் இரவு செயின்ட் லூயிஸ் மிசெளரி நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது.
ஜெர்ரி பெசலே, ஜாக்குலின் பாக்ஸிற்க்காக வாதிட்ட வக்கீல் கூறுகையில், ஜான்சன் & ஜான்சன் விற்பனையை அதிகரிக்க தங்களுடைய பட்டுக்கல் (டால்க்) சார்ந்த பொருட்கள் புற்றுநோய் ஏற்படுத்தும் என்ற உண்மையை மறைத்துவிட்டனர் என்று வாதாடினார். இது சம்பந்தமாக சுமார் 1,000 வழக்குகள் மிசெளரி மாநில நீதிமன்றத்திலும் 200 வழக்குகள் நியூ ஜெர்சி நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
ஜூரிகள், ஜான்சன் & ஜான்சன் செய்தது மோசடி , அலட்சியம் மற்றும் சதி என்ற தீர்மானத்தை நீதிபதியிடம் சமர்ப்பித்தனர். ஜூரர்கள், ஜாக்குலின் பாக்ஸின் குடும்ப வழக்கறிஞர்கள், மற்றும் நீதிமன்ற ஆவணங்கள் படி, நீதிபதி ஜாக்குலின் பாக்ஸின் குடும்பத்திற்கு $10 மில்லியன், மற்றும் அபராதத் தொகையாக 62$ மில்லியனையும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கரோல் குட்ரிச், ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் “தாங்கள் சுகாதார மற்றும் நுகர்வோர் பாதுகாப்பின் படி தான் தங்களின் பொருட்களைத் தயாரிப்பதாகவும், தங்கள் பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பானவை என்றும் கூறினார். நீதிபதி கூறிய தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாகயிருக்கிறது என்றும், ஜாக்குலின் பாக்ஸின் குடும்பத்திற்கு ஆறுதலையும்” கூறினார்.
இந்த வழக்கைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள – ஹோகன்ஸ் மற்றும் ஜான்சன் & ஜான்சன், எண் 1422 – CC09012 செயின்ட் லூயிஸ் நகரத்தின் சர்க்யூட் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு.