துபாய்:
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றுக்குள் வங்கதேசம் அணி நுழைந்தது.
வங்கதேசம் – பபுவா நியுகினியா அணிகள் இடையே இன்று நடந்த போட்டியில் பபுவா நியுகினியா அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதையடுத்து டி20 உலகக்கோப்பை 2021-ன் பிரதான சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர்களில் 181/7 என்று பெரிய இலக்கை நிர்ணயித்தது. தொடர்ந்து ஆடிய பபுவா நியுகினியா அணி 29/7 என்று மடிந்து பிறகு 97 ரன்களுக்குச் சுருண்டது, இந்த அணியில் விக்கெட் கீப்பர் கிப்லிங் டோரிகா 34 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்கள் விளாசி 46 ரன்கள் எடுக்க சாத் சோப்பர் 11 ரன்கள் எடுக்க இவர்கள் இருவர் மட்டுமே இரட்டை இலக்கை எட்ட 19.3 ஓவர்களில் 93 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி வெளியேறியது.