உலகின் முதல் நிலை கோடீஸ்வரர்களுள் ஒருவரான பில் கேட்ஸ் மூத்த மகள் ஜெனிபர் கேட்ஸ் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஈக்விஸ்ட்ரியன் எனும் குதிரையேற்ற விளையாட்டு வீரர் நெயில் நாசர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

2020 ம் ஆண்டு ஜனவரி மாதம் இவர்களின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 17 ம் தேதி ஜெனிபர் கேட்ஸ்க்கு சொந்தமாக நியூயார்க் அருகே உள்ள குதிரைப் பண்ணையில் நடந்தது, 124 ஏக்கரில் அமைந்துள்ள இந்தப் பண்ணையில் நடந்த திருமணத்தில் பில் கேட்ஸ் மற்றும் மெலின்டா கேட்ஸ் இருவரும் கலந்து கொண்டனர்.

15 கோடி ரூபாய் செலவில் நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில் அமெரிக்காவின் புகழ்பெற்ற கேக் கலைஞரான சில்வியா வெய்ன்ஸ்டோக் வடிவைமைத்த ஆறு அடுக்குகளை கொண்ட பிரமாண்ட ‘வெட்டிங் கேக்’ இடம்பெற்றது.

உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமண நிகழ்ச்சி நடந்த பண்ணையைச் சுற்றி போக்குவரத்து மாற்றமும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

திருமண நிகழ்ச்சியைச் தொடர்ந்து வரும் சனிக்கிழமை அன்று முக்கிய விருந்தினர்கள் மற்றும் அழைப்பாளர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் விருந்து நிகழ்ச்சி நடைபெறயிருக்கிறது.