வாஷிங்டன்:
ஹிந்துத்வா அமைப்புகளுடன் தொடர்புடைய 3 மில்லியன் நன்கொடை அமெரிக்கா பல்லைக்கழகம் நிராகரித்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இந்திய ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நெருக்கமான ‘தர்மா நாகரீக அறக்கட்டளை’ மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஹிந்து சுவயம்சேவாக் சங் ஆகிய இரு ஹிந்துத்வா அறக்கட்டளைகளை உருவாக்க பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி அளித்தது.
இரு அறக்கட்டளைகளும் 5 ஆண்டுகளுக்கு தலா 1.5 மில்லியன் டாலர் நன்கொடையாக செலுத்தி, ‘வேதம் மற்றும் இந்திய நாகரீகம், நவீன இந்தியா, ஜெயினிஸம், சீக்கியம்’ குறித்த கல்வி திட்டம் மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்ள ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இந்த ஒப்பந்தம் வெளிப்படையாக மேற்கொள்ளவில்லை என்றும், முறையான ஆலோசனை மேற்கொள்ளப்படவில்லை என்றும் புகார் எழுந்தது. இந்த இரு அமைப்புகளுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பல்கலைக்கழகத்தின் தெற்காசிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்களும், மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய குழு அமைத்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது. இரு அறக்கட்டளைகளின் ‘வேதம் மற்றும் இந்திய கலாச்சாரம் மற்றும் நவீன இந்தியா’ குறித்த கல்வி திட்டத்தை ரத்து செய்து குழு உத்தரவிட்டது. ‘ஜெயின் மற்றும் சீக்கியம்’ கல்வி குறித்து மறு ஆய்வு செய்யவும் அந்த குழு பரிந்துரை செய்தது.