உ.பி. லகிம்பூா் வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் உள்பட 13 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உ.பி. மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்துக்கு உ.பி. மாநில துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, நிகழ்ச்சிக்கு வருகை வந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் உள்பட பாஜகவினரின் வாகனங்கள் மீது கல்வீச்சு நடைபெற்றது.
இதனால் கார்கள் நிலைதடுமாறி விவசாயிகள் மீது மோதிaது. இதனால், இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், பாஜகவினரின் வாகனத்துக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில்ல் 4 விவசாயிகள், 4 பத்திகையாளர்கள் உள்பட 9 இறந்தனர்.
இது தொடர்பாககாவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தற்போது, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 12 பேர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
தடைமீறி லகிம்பூர் சென்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கைது!