சுமார் 6 வருட இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா தனுஷ் மீண்டும் படம் இயக்குகிறார்.

தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இது தயாராகிறது. லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

3, வை ராஜா வை படங்களை ஐஸ்வர்யா தனுஷே எழுதி இயக்கியிருந்தார். இந்தமுறை சஞ்சீவ் என்பவர் ஸ்கிரிப்ட் பணிகளை கவனிக்கிறார். த்ரில்லர் படமாக இது தயாராகிறது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் இன்று (அக்டோபர் 2) வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.