சென்னை

ந்து காவல்துறை அதிகாரிகளுக்குக் கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாகச் செயல்பட்டதற்காகக் காந்தியடிகள் விருது வழங்கப்பட உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளுக்குத் தமிழக முதல்வர்  காந்தியடிகள் விருது வழங்குவது வழக்கமாகும்.  இந்த விருதினை குடியரசு தினமான ஜனவரி 26 அன்று  முதல்வர் வழங்குவார்.  இந்த விருது பெரும் அனைவருக்கும் விருதுடன் ரூ.40000 பரிசும் வழங்கப்படுகிறது.  இந்த வருடத்துக்கான விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு ”இந்த வருடம்  ப.தெட்சணாமூர்த்தி, காவல் துணை கண்காணிப்பாளர், மா.குமார், காவல் ஆய்வாளர், ,பா.சக்தி, காவல் ஆய்வாளர், .ச.சிதம்பரம், காவல் உதவி ஆய்வாளர், அசோக் பிரபாகரன், தலைமைக் காவலர்  ஆகியோருக்கு, கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக காந்தியடிகள் விருது வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இவர்களுக்குத் தமிழக முதல்வரால் இந்த விருதுகள் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி அதாவது குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளது.  மேலும் ஒவ்வொருவருக்கும் இந்த விருதுடன் பரிசுத் தொகையாக ரூ.40000 வழங்கப்பட உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.