‘நானும் ரெளடிதான்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்வேதா சாபு சிரில் கலை இயக்கம் செய்கிறார்.

விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடிப்பதாக காதலர் தினத்தன்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும், இது தொடர்பாக முன்னணி ஓடிடி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..