சினிமா உலகில் நடிகர் திலகம் என்று அழைக்கப்பட்டவர் சிவாஜி கணேசன். செவாலியர், தாதாசாகேப் பால்கே, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளை பெற்ற நடிகர் திலகம் 1952-இல் வெளியான ‘பராசக்தி’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றார்.

காலத்தால் போற்றப்பட வேண்டிய கலைஞர்களுள் சிவாஜிகணேசனும் ஒருவர்.

செவாலியர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான இன்று அவரை கவுரவப்படுத்தும் வகையில் கூகுள் நிறுவனமானது அவரது புகைப்படத்தை வைத்து சிறப்பு டூடுல் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளது.