2002ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பிரபலமானார்.

தற்போது ஷெரின் நடிப்பில் ‘ரஜினி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கி இருக்கிறார். விஜய் சத்யா இதில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். மேலும் வனிதா, மூக்குத்தி முருகன், குக்வித் கோமாளி பாலா, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர்.

ரஜினி படத்தை ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துள்ளார்கள். தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.