ராமநாதபுரம்: மகளாய அமாவாசையையொட்டி, ராமேஸ்வரம் வர பக்தர்களுக்கு 2 நாட்கள் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி, வரும் 4ந்தேதி மற்றும் 5ந்தேதி பக்கதர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, வெள்ளி, சனி, ஞாயிறு அன்று கோவில்கள் திறக்க தமிழகஅரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வருகிற 6-ந்தேதி (புதன்கிழமை) புரட்டாசி மகாளய அமாவாசை வருகிறது. அன்றைய தினமும் சில கோவில்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு நிதி கொடுப்பது இந்துக்களின் பழக்கம். இதனால் லட்சக்கணக்கானோர் ராமேஸ்வரத்தில் குவிவது வழக்கம். மேலும் அன்றைய தினம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, ராமேஸ்வரம் கோவில் ஈஸ்வரனை வழங்கி செல்வார்கள். அதனால் கொரோனா தொற்று பரவும் சூழ்நிலை உருவாகக்கூடும் என்பதாலும் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.
இதையொட்டி, பக்தர்கள் யாரும் ராமேஸ்வரம் வரவேண்டாம் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சந்திரகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், வருகிற 5 மற்றும் 6-ந்தேதி ஆகிய 2 நாட்களில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் வழிபடவும், அக்னி தீர்த்த கடற்கரை பகுதிக்கு செல்லவும், நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்படுகிறது.
கொரோனா மூன்றாம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.