டெல்லி: ஜெஇஇ மெயின் தேர்வுமுடிகளை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. நள்ளிரவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் ஆகஸ்டு 26, 27, 31 மற்றும் செப்டம்பர் 1 மற்றும் 2. ஆகிய தேதிகளில் JEE மெயின் நான்காவது அமர்வு தேர்வை நடத்தியது. தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த தேர்வு முடிவுகளை jeemain.nta.nic.in. என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
நாடு முழுவதும் ஜெஇஇ தேர்வு எழுதியவர்களில் 44 பேர் 100 சதவீத மதிப்பெண்களை பெற்று உள்ளதாகவும் 18 பேர் முதலிடம் பெற்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 4 பேர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர், தெலுங்கானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களை சேர்ந்த தலா இரண்டு பேர் என மொத்தம் 18 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
ஜேஇஇ தேர்வு முடிவுகளை அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது