பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார். அவருக்கு வயது 80.

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கார் பெர்னாண்டஸ் (வயது 80) இன்று (திங்கள்கிழமை) மதியம் காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு,  மங்களூரு யெனெபோயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைபலனின்றி அவர் இன்று காலமானாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மூத்த தலைவரான ஆஸ்கர்  பெர்னாண்டஸ் யோபா பயற்சி செய்து வருவது வழகக்ம. அதுபோல, யோகா பயிற்சி செய்தபோது, கீழே விழுந்ததால், அவரது தலையில் காயம் ஏற்பட்டு, இரத்தம் உறைந்தது. இதையடுதது, அவர் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து தொடர் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலன்றி இன்று மதியம் உயிரிழந்தார்.

முன்னதாக அவரை, கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நளின் குமார் கடீல் எம்.பி. உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் 80 வயதான காங்கிரஸ் வீரரை மருத்துவமனையில்  அவரைச் சந்தித்தனர்.

ஆஸ்கார் பெர்ணான்டஸ், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்பட அவர்களது குடும்பத்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக திகழ்ந்தார்.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி  அரசாங்கத்தில்,  டாக்டர். மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் (சுயேட்சை பொறுப்பு)  இந்திய அரசு போக்குவரத்து, சாலை மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக்கான மத்திய அமைச்சரவை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்துள்ள ஆஸ்கர் பெர்னாண்டஸ், தற்போது காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவராகவும் உள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பாராளுமன்ற செயலாளராக பணியாற்றினார்.

ஆஸ்கர் பெர்னாண்டஸ், கர்நாடகாவில் உடுப்பி தொகுதியில் இருந்து 1980 இல் 7வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே தொகுதியில் இருந்து 1984, 1989, 1991 மற்றும் 1996 ல் மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1998 இல் ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 இல் மீண்டும் ராஜ்யசபா வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2004 முதல் 2009 வரை மத்திய அமைச்சராக இருந்தார், புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்கம், என்ஆர்ஐ விவகாரங்கள், இளைஞர்கள் போன்ற பல இலாகாக்களைப் பெற்றார். மற்றும் விளையாட்டு விவகாரங்கள் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு. பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் கவுன்சிலின் உறுப்பினராக இரண்டு முறை பணியாற்றினார்.

மறைந்த ஆஸ்கர் பெர்னாண்டசுக்கு கு மனைவி, மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.