சென்னை: வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ளதல், எண்ணூர், நாகை, கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை  கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இதன் காரணமாக நீலகிரி கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், தென் மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் நீலகிரி, கோவை, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, ஈரோடு, வேலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தார், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

15-ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், கடலோ மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால், பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  வங்கக்கடலில் வடமேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இது மேலும் வலுபெற்று ஒடிசா மாநிலம் சந்தபாலி அருகே கடை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடலூர், சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், காரைக்கால், நாகை, புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.