பெங்களூரு
இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கத் தாலிபான்களே காரணம் எனக் கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் பெல்லாட் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. நாடெங்கும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ..100 ஐ தாண்டி உள்ளதால் மக்கள் மிகவும் கவலை அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒருவாரமாக ஏற்றம் ஏதும் இல்லாமல் உள்ளது,
கர்நாடகாவில் உள்ள ஹூப்பள்ளி, – தார்வாட் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான அரவிந்த் பெல்லாட் என்பவர் பாஜகவைச் சேர்ந்தவர் ஆவார். அவர் இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார். அப்போது அவரிடம் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அரவிந்த் பெல்லாட்,, “ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியதால் உலகெங்கும் எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. எனவே இந்த விலை உயர்வுக்குத் தாலிபான்களே காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.