சமீபத்தில் நடைபெற்ற மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று படத்துக்கு, சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரண்டு விருதுகளை வென்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விருது விழா ஆன்லைனில் மட்டுமே நடத்தப்பட்டது. தற்போது மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று படம் வென்ற விருதை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளது.

அந்த விருது பார்சலில் வந்த போது, தன்னுடைய மனைவியுடன் அவர் அதனை பிரித்து பார்த்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் சூரரைப் போற்று. கடந்தாண்டு தீபாவளியையொட்டி அமேசான் ஓடிடியில் இந்த படம் வெளியானது.