வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2,452 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இங்குள்ள விலங்குகளைத் தத்தெடுக்கும் திட்டத்தையும் இப்பூங்கா நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதன் மூலம் விலங்குகளை தத்தெடுப்பவர், அதற்குரிய உணவு மற்றும் பராமரிப்புச் செலவை அளிக்கலாம். செலவிடும் தொகைக்கு வரிவிலக்கும் உண்டு.
நடிகர் சிவகார்த்திகேயன் இங்குள்ள ‘விஷ்ணு’ என்ற ஆண் சிங்கத்தையும், ‘பிரகுர்த்தி’ என்ற பெண் யானையையும் 6 மாதங்களுக்கு தத்தெடுப்பதாக அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே 2018 முதல் 2020 வரை ‘அனு’ என்ற வெள்ளைப் புலியை சிவகார்த்திகேயன் தத்தெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.