‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு ‘அந்தகன்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. தியாகராஜன் தயாரிக்கும் இந்தப் படத்தை அவரே இயக்கவும் செய்கிறார். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்து வருகிறார்.
ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த், தபு கதாபாத்திரத்தில் சிம்ரன் , ராதிகா ஆப்தே வேடத்தில் பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.
முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி, நவரச நாயகன் கார்த்திக், கே.எஸ். ரவிக்குமார், ஊர்வசி, யோகி பாபு, மனோபாலா, மற்றும் வனிதா விஜயகுமார் நடித்துள்ளனர்.
அந்தகன் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே நடிகர் கார்த்திக், கே.எஸ். ரவிக்குமார், நடிகை பிரியா ஆனந்த், ஊர்வசி, சமுத்திரக்கனி ஆகியோர் கலந்துகொண்ட நிலையில், தற்போது நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள யோகி பாபு அவரது டப்பிங் பணிகளை முடித்துள்ளார்.