
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சுதீப் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இதுதவிர தனது அறக்கட்டளை மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், ஏழை, எளியோருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
நடிகர் சுதீப் தனது 50-வது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். இதையொட்டி, பெல்லாரி மாவட்டம் சந்தூர் என்ற கிராமத்தில் சுதீப் ரசிகர்கள் எருமை மாட்டை பலியிட்டு, அதன் ரத்தத்தை கட்அவுட் மீது தெளித்து, சுதீப் வாழ்க என கோஷமிட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பெல்லாரி நகர் காவல் நிலையத்தில் சுதீப் ரசிகர்கள் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel