இயக்குனர் கவின் இயக்கத்தில் தயாராகும் வேலன் திரைப்படத்தில் முகேன் ராவ் கதாநாயகனாக நடிக்க நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தில் பிரபு,ஹரீஷ் பரேடி,தம்பி ராமய்யா,சூரி,மரியா வின்சென்ட்,பிரிகிடா,ப்ராங்க் ஸ்டார் ராகுல்,பில்லி முரளி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் தயாரித்துள்ளனர் . கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்கள் மற்றும் ஆடியோ உரிமத்தை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது
இந்நிலையில் இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்திருக்கும் வேலன் திரைப்படத்திலிருந்து முதல் பாடல் இன்று வெளியானது. பிரபல தமிழ் பாடகர் வேல்முருகன் பாடியுள்ள டண்டணக்கா டண்டணக்கா தவுலடி என்னும் பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டார்.