கடந்த 2017-ம் ஆண்டு முதல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த வருடம் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக் பாஸ் 5 தாமதமாகியுள்ளது.
சமீபத்தில் ப்ரோமோ ஷூட்டிங் நடைபெறும் இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 முதல் கட்ட பணிகள் போட்டோ ஷூட் உடன் தொடங்கப்பட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 5 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் 5-ம் சீசனுக்கு ரசிகர்கள் தயாராகி வரும் நிலையில், இதனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். கடந்த வாரம் அதற்கான ப்ரோமோ படப்பிடிப்பு நடந்தது.
இந்நிலையில் பிக் பாஸ் 5ம் சீசன் ப்ரொமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. கமல் ஹாசன் ‘ஆரம்பிக்கலாமா’ என கேட்டிருக்கிறார்.
கமலின் விக்ரம் பட டீஸரில் வந்து பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்த ‘ஆரம்பிக்கலாமா’ என்கிற வசனத்தை தான் பிக் பாஸ் ப்ரொமோவிழும் பயன்படுத்தி இருக்கின்றனர். மேலும் பிக் பாஸ் 5ம் சீசனின் புது லோகோவும் ப்ரொமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் பிரபலங்களின் பெயர்கள் ஏற்கனவே பேசப்பட்டு வந்த நிலையில், பிரபல யூடியூபரான ஜி.பி.முத்துவின் பெயரும் இந்த பேச்சுகளில் இடம் பெற்றது.
யூடியூபில் தனக்கு வந்த கடிதங்களை வெள்ளந்தியாக வாசித்து தனக்கே உண்டான வட்டார வழக்கு மொழியில் பதில் கமெண்டுகளை கூறுவதன் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வாரா? என்கிற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துவந்த நிலையில் தற்போது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.