மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், கலையரசன், சாய் தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘லாபம்’. டி.இமான் இசையமைக்க, ஆறுமுககுமார், விஜய் சேதுபதி இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
தற்போது தமிழகத்தில் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து ‘லாபம்’ படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து ஆலோசனை நடத்தியது படக்குழு.
இறுதியாக செப்டம்பர் 9-ம் தேதி ‘லாபம்’ வெளியாகும் என்று புதிய போஸ்டருடன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.
இந்த நிலையில், இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.