தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் சித்தார்த். கடைசியாக சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான நவரசா வெப்சீரிஸில் இன்மை எனும் எபிசோடில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் சித்தார்த் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.
ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சித்தார்த் சமூக பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது ட்விட்டரில் பேசுவது வழக்கம். அந்த வகையில் நடிகர் சித்தார்த்தின் மீது வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாக சிலர் அவர் இறந்துவிட்டதாக பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்னர். இதனால் கோபமடைந்த நடிகர் சித்தார்த் தன்னை குறிவைத்து மிகவும் கீழ் தரமாக வெறுப்புணர்வு கொட்டப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
https://twitter.com/Actor_Siddharth/status/1433423447783182338