‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர்.
வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்ததையொட்டி, புதிய போஸ்டரை வலிமை தயாரிப்பாளர் வெளியிட்டனர்.
தற்போது வெளிநாடுகளுக்கான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளதால் குறிப்பிட்ட காட்சியை ரஷ்யாவில் படமாக தீர்மானித்து வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் ரஷ்யா சென்றுள்ளனர். நாளை அஜித்தும் ரஷ்யா கிளம்பிச் செல்கிறார்.
முக்கியமான சண்டைக் காட்சியை படமாக்குவதால் தயாரிப்பாளர் போனி கபூர் ஏற்கனவே ரஷ்யா கிளம்பிச் சென்றுள்ளார். அங்கு அஜித் இடம்பெறும் பைக் ரேஸ் காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், ’வலிமை’படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதையொட்டி படக்குழுவினர் இன்று காலை சென்னை திரும்பியுள்ளனர். இம்மாதத்தில், இரண்டாம் பாடலுக்கான அறிவிப்பும் விரைவில் வெளியீட்டுத் தேதியும் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.