செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை தாணு தயாரிக்க, செல்வராகவன் இயக்க, தனுஷ் நடிக்கிறார். காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி போன்ற மாஸ்டர் பீஸ்களில் செல்வராகவனுடன் இணைந்து நின்ற யுவனும், ஒளிப்பதிவாளர் அர்விந்த் கிருஷ்ணாவும் நானே வருவேனில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்குவதாக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதையடுத்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிப்பார் என்கின்றன செய்திகள்.
தனுஷ் – செல்வராகவன் கூட்டணிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவர்கள் கூட்டணியில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் தனது செல்பி புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, அதில் ‘நானே வருவேன்’ என குறிப்பிட்டுள்ளார். தலைப்பு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அவர் இவ்வாறு சூசகமாக பதிவிட்டுள்ளதாக கருதப்படுகிறது.