அ.தி.மு.க. முன்னாள் அவைத்தலைவராக இருந்த கவிஞரும், பாடலாசிரியருமான புலமைப்பித்தன் (வயது 85) திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கவிஞர் புலமைப்பித்தன் எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்திற்காக எழுதிய ‘சிரித்து வாழ வேண்டும்.. பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே’ என்கிற பாடல் மிகவும் பிரபலம்.
இதேபோல் ‘நான் யார்.. நான் யார்..’ பாடல், ‘ஓடி ஓடி உழைக்கணும்’.. ‘ஆயிரம் நிலவே வா..’ என்கிற பாடல் உள்ளிட்ட பல புகழ்பெற்ற பாடல்களை புலமைப்பித்தன் எழுதியுள்ளார்.
இந்நிலையில்தான் அடையாறு Fortis மலர் மருத்துவமனையில் புலவர் புலமைப்பித்தன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அரசவைக் கவிஞராக இருந்த அவருக்கு life Support பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக Fortis மலர் மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
மருத்துவமனையில் புலமைப்பித்தனின் மனைவி தமிழரசி, பேரன் திலீபன் மற்றும் புலவர் புலமைப்பித்தன் அவர்களின் தனி செயலாளர் குணசேகரன் மற்றும் பாடலாசிரியர் மதுரா ஆகியோர் உடனிருக்கின்றனர்.