லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு இதுவரை 33 குழந்தைகள் உள்பட 40 பேர் பலியாகி உள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலத்தில் டெங்கு உள்பட மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. அங்குள்ள பிரோசாபாத் மாவட்டத்திர் மர்ம காய்ச்சலின் தாக்கம் உச்சத்தில் உள்ளத. அங்கு இதுவரை மர்ம காய்ச்சலால் 34 சிறுவர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில முதல்வர் யோகியும் உறுதி செய்துள்ளார்.
இந்த மர்ம காய்ச்சல், உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தின் கோன் கிராமத்தில் கடந்த 24 ஆம் தேதி கண்டறியப்பட்டதாகவும், முதல்கட்டமாக இந்த மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகியிருந்தார்கள். இதனால் சுதாரித்துக்கொண்ட மருத்துவ வல்லுநர்கள் குழு அங்கு முகாமிட்டு ஆய்வுகளை மேற்கொண்டது. இதில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான டெங்கு அறிகுறியும் இருப்பது தெரியவந்தது. ஆனால், டெங்குக்கான மருந்துகளுக்கு மர்ம காய்ச்சல் கட்டுப்படவில்லை என்றும், இந்த மர்ம காய்ச்சல் மதுரா, ஆக்ரா, மற்றும் ராஜஸ்தானின் பரத்பூர் பகுதிகளிலும் பரவி வருவதாக கூறப்படுகிறத.
இந்த மர்ம காய்ச்சலால் 100 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், பிரோசாபாத் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 33 சிறுவர்கள் உட்பட 40 பேர் பலியாகி இருக்கிறார்கள். மேலும் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருபவர்களும் அதிகரித்து இருப்பதால் தனி பிரிவை ஒன்றை ஏற்படுத்தி மாவட்ட மருத்துவமனை தீவிர சிகிச்சையை அளித்து வருகிறது.
கடுமையாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு தொடர்ந்து பெய்த கனமழையும் அதனால் உருவான சுகாதார சீரழிவுமே காரணம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.