திருவனந்தபுரம்:
கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, கேரளாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் வரும் திங்கட்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த உள்ளதாகவும், இரவு 10 முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடர்ந்து 3வது நாளாக இன்று கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியது. இந்தியாவில் தினசரி நோயாளிகள் எண்ணிக்கையில் 60 சதவீதத்திற்கு மேல் கேரளாவில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.