சென்னை: ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு ஆயுள் முழுவதும் செல்லும் என தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மத்தியஅரசு அறிவித்த நிலையில், தற்போது தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை  ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) வைக்கப்பட்டு, தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசு புதிய திட்டம் கொண்டு வந்தது. அதன்படி, டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லும் என்ற விதி அமலில் இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.  இதனையடுத்து, அந்த சான்றிதழ் ஆயுள்முழுவதும் செல்லும் என்று மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, தற்போது தமிழகஅரசு,  ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள்வரை செல்லும் என நீட்டித்து  அரசாணை வெளியிட்டு உள்ளது. இதனால் ஆசிரியர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.

இதனால் ஆசிரியர்கள், இனி ஒருமுறை டி.இ.டி தேர்வு எழுதினாலே அந்த சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும். இதனால் ஆசிரியர்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களின் பல வருட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.