ரியாத்:
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்ட இந்தியர்கள் திரும்ப விரும்பினால், தனிமைப்படுத்தல் இல்லை என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சவுதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இரண்டு முறை தடுப்பூசி போட்டுக் கொண்ட சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள், நாடு திரும்ப விரும்பினால், அவர்களுக்குத் தனிமைப்படுத்தல் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் மற்றும் அதன் புதிய மாறுபாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,
கடந்த ஜூலை மாதத்தில், சவுதி அரேபியா, இந்தியா உள்ளிட்ட ‘சிவப்பு பட்டியலில்’ உள்ள நாடுகளுக்குப் பயணிக்கும் மக்களுக்கு, மூன்று ஆண்டு பயணத் தடை விதிப்பதாகத் தெரிவித்தது.
இருப்பினும், இந்த மாத தொடக்கத்தில், உம்ரா யாத்திரையின் ஒரு பகுதியாக இஸ்லாமியப் புனித நகரமான மக்காவுக்கு வெளிநாட்டிலிருந்து முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்ட யாத்திரிகர்களை அனுமதிக்கச் சவுதி அரேபியா அனுமதி வழங்கியது.
இதற்கிடையில், கடந்த 14 நாட்களில் இந்தியாவிலிருந்து வந்த அல்லது வந்திருந்த பயணிகளுக்கான விசா-ஆன்-வருகை வசதியை ஐக்கிய அரபு அமீரகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்ட இந்தியர்கள் திரும்ப விரும்பினால், தனிமைப்படுத்தல் இல்லை என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.