எழில் இயக்கத்தில் பார்த்திபன், கௌதம் கார்த்திக் நடிக்கும் படம் ‘யுத்த சத்தம்’. முதல் முறையாக த்ரில்லர் கதையை இயக்குகிறார் எழில். இது மர்மம் நிறைந்த, பரபரப்பான த்ரில்லர் படமாக உருவாகவுள்ளது.

ராஜேஷ் குமார் எழுதிய ‘யுத்தசத்தம்’ க்ரைம் நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் ரோபோ ஷங்கர், காமராஜ், மது ஸ்ரீ, மனோபாலா, சாம்ஸ், வையாபுரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கும் இப்படத்துக்கு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (ஆக.23) வெளியானது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

[youtube-feed feed=1]