
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கங்குபாய் காட்யவாடி’. இப்படத்தில் ஆலியா பட் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
1960களில், மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியில் வாழ்ந்த கங்குபாய் என்பவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் இது.
இந்நிலையில், உண்மையான கங்குபாயின் தத்துப்பிள்ளை பாபுஜி ஷா ஆலியா பட், சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்.
படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்கிற பாபுஜி ஷாவின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், பாபுஜி ஷா தான் கங்குபாயின் தத்துப்பிள்ளை என்பதை நிரூபிக்கத் தவறியிருப்பதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
Patrikai.com official YouTube Channel