மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவிற்கும், சிறந்த திரைப்படத்திற்கான விருது சூரரைப்போற்று படத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து 26 மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்கள் இங்கு திரையிட. அதில் சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவிற்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருது சூரரைப்போற்று படத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தி பேமிலி மேன் 2′ வெப்தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகையாக நடிகை சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மெல்போர்ன் 2021 இந்திய திரைப்பட விழாவில் விருதினை வென்ற நடிகர்கள் மற்றும் படங்களின் முழு பட்டியல்:
* சிறந்த திரைப்படம் – சூரரை போற்று
* சிறந்த நடிகர் – சூர்யா சிவகுமார் (படம்: சூரரை போற்று)
* சிறந்த நடிகை – வித்யா பாலன் (படம்: ஷெர்னி) மற்றும் நிமிஷா சஜயன் ( படம்: தி கிரேட் இந்தியன் கிச்சன்)
* சிறந்த இயக்குனர் – அனுராக் பாசு (படம்: லுடோ) & பிருத்வி கோனனூர் (படம்: பிங்கி எல்லி)
* சிறந்த சீரிஸ் – மிர்சாபூர் சீசன் 2
* சீரிஸின் சிறந்த நடிகை – சமந்தா அக்கினேனி (சீரிஸ்: பேமிலி மேன் 2)
* சீரிஸின் சிறந்த நடிகர் – மனோஜ் பாஜ்பாய் (பேமிலி மேன் 2)
* ஈகுவாலிட்டி இன் சினிமா (குறும்படம்) – ஷீர் கோர்மா
* ஈகுவாலிட்டி இன் சினிமா அவார்ட் (திரைப்படம்) – தி கிரேட் இந்தியன் கிச்சன்
* சிறந்த இண்டி படம் – பையர் இன் தி மவுண்டைன்
* சினிமாவில் பன்முகத்தன்மை விருது – பங்கஜ் திரிபாதி
* டிஸ்ரப்டர் விருது – சனல்குமார் சசிதரன்
* சிறந்த ஆவணப்படம் – ஷட் அப் சோனா