டொனால் டிரம்ப்
டொனால் டிரம்ப்

வாஷிங்டன்:
அமெரிக்காவின் வேலை வாயப்புகளை இந்தியாவும், சீனாவும் அபகரித்துக் கொண்டுள்ளது. அதை மீட்டு அமெரிக்கர்களிடம் ஒப்படைப்பேன் என்று அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலில் முன்னிலையில் இருப்பவர் டொனால்டு டிரம்ப்.
சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறி சர்வதேச பார்வையை தன் பக்கம் இழுப்பதில் இவர் குறியாக இருக்கிறார்.
இந்த வரிசையில், ‘‘அமெரிக்காவில் உள்ள வேலைவாய்ப்புகளை இந்தியாவும், சீனாவும் அபகரித்துக் கொள்வதாகவும், அதை மீட்டு மீண்டும் அமெரிக்கர்களுக்கு வழங்குவேன்’’ என பேசியுள்ளார்.
இவரது பேச்சு அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள், சீனர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு அமெரிக்க நிறுவனங்களிடம் அவுட் சோர்சிங் முறையில் இந்தியா மற்றும் சீனாவில் இயங்கி வரும் நிறுவனங்களுக்கும், அதன் ஊழியர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் மெக்சிகோ, ஜப்பான், வியட்நாமில் இருந்து வேலைவாய்ப்புகளை பறித்து அமெரிக்கர்களுக்கு வழங்கப்படும் என பேசியுள்ளார்.
‘‘ஆப்ரிக்கா தலைவர்கள் என்னை ஏற்றுக் கொண்டுள்ளனர். அதனால் அமெரிக்கா வாழ் ஆப்ரிக்கர்களை நான் கவனத்தில் எடுத்துக் கொள்வேன். அமெரிக்காவில் வாழும் 58 சதவீதம் ஆப்ரிக்க இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். அவர்களை நான் கவுரவிக்க போகிறேன்’’ என்றும் தெரிவித்துள்ளார்.
தெற்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், ‘‘இறுதியில் அதிபர் பதவிக்கான போட்டி எனக்கும், ஹிலாரி கிளின்டனுக்கும் இடையே தான். அமெரிக்க வரலாற்றில் இது பெரும் திருப்பு முனையாக இருக்கும்’’ என்றும் இவர் பேசி வருகிறார்.