இயக்குநர் கெளதம் மேனனுடன் சிம்பு இணைந்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இதை தவிர சிம்பு மாநாடு படத்தின் வேலைகளை நிறைவு செய்துள்ளார். ஹன்சிகாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள மஹா படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.instagram.com/p/CStyM0ll6Fu/

இந்நிலையில் தற்போது நடிகர் மஹத் ராகவேந்திரா அவரது மனைவி பிராச்சி மிஸ்ராவும் சிம்புவை சந்தித்த படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் பிராச்சி.

இதை தவிர ட்விட்டரில் வேறொரு படத்தை பகிர்ந்திருந்தார் சிம்பு. அந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.