நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார்.

வலிமை படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடையும் முன்பே அஜித்தின் அடுத்த படத்தை பற்றின தகவல் வெளியானது. அடுத்த அஜித்தின் படத்தினையும் எச்.வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

ஆம் மூன்றாவது முறையாக இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், வலிமை படத்தின் ரிலீஸை தொடர்ந்து இந்த படத்திற்கான அறிவிப்பு வெளிவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் சமூக வலைதளங்களில் தல 61 பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதிலும் குறிப்பாக இந்த தல 61 படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் தான் இசையமைப்பார் என ரசிகர்கள் அவருடைய பழைய ஒரு டிவிட்டை தற்போது பரப்பி வருகின்றனர்.

இந்த டிவிட்டில் நேர் கொண்ட பார்வை படப்பிடிப்பில் தல அஜித்துடன் ஜிப்ரான் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் உள்ளது. அப்பொழுது தல அஜித், இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு “நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்’ என கூறியதாக டிவிட்டில் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]