ஃபெஃப்கா ரைட்டர்ஸ் யூனியன் மற்றும் தியேட்டர் ஆஃப் ட்ரீம்ஸ் சார்பில் டால்வின் குரியாக்கோஸ், ஜினு.வி.ஆபிரகாம் மற்றும் டிலீஷ் நாயர் இணைந்து தயாரிக்கும் படம் காப்பா.

திருவனந்தபுரத்தை சுற்றி நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் ஜி.ஆர்.இந்து கோபன் எழுதிய பிரபலமான நாவலை தழுவி உருவாகவுள்ளது இந்த படம் .

நடிகை மஞ்சுவாரியர் உடன் நடிகர் பிரித்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆசிப் அலி மற்றும் அன்னா பென் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். காப்பா படத்திற்கு ஜஸ்டின் வர்கீஸ் இசையமைக்க சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

பிரபல எழுத்தாளர் ஜி.ஆர்.இந்து கோபன் கதை, திரைக்கதை , வசனத்தில் இயக்குனர் வேணு இயக்கும் காப்பா படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.