நடிகை ஷெரினுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடன் கடந்த 3-4 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது லேசான பாதிப்பு மட்டுமே இருப்பதாகவும், அறிகுறிகள் எதுவும் தனக்கு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ள ஷெரின், விரைவில் நலம் பெறுவேன் எனவும் ஷெரின் கூறியுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஷெரின் தடுப்பூசி 2 டோஸ்களையும் போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.