சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின்  மாற்றுத் தலைவர்களாக 4 பேரை நியமனம் செய்து,  சபாநாயகர் அப்பாவு அறிவித்து உள்ளார். இவர்கள்  சட்டப்பேரவையில் தலைவர் இல்லாதபோது பேரவையை நடத்தும் வகையில் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில்  பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு  ஆட்சியை கைப்பற்றிய நிலையில், கடந்த 13-ம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 14-ம் தேதி, சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதையடுத்து இன்றுமுதல் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்,  சபாநாயகரும் சட்டப்பேரவைத் தலைவருமான அப்பாவு,  பேரவையை நடத்த தலைவர் இல்லாதபோது, சபையை நடத்த  மாற்றுத் தலைவர்களை அறிவித்தார்.

அதன்படி சட்டமன்றத்தின்  மாற்றுத் தலைவர்களாக அன்பழகன், எஸ்.ஆர்.ராஜா, உதயசூரியன் மற்றும் டி.ஆர்.பி.ராஜா ஆகிய 4 பேர் செயல்படுவர் என்று சபாநாயகர்  அப்பாவு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையின்சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோர் இல்லாத நேரத்தில், பேரவையை மாற்றுத் தலைவர்கள் வழிநடத்துவர்.