காபூல்:
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் தாலிபான் கிளர்ச்சியாளர்கள் இன்று நுழைந்தனர்.

இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், அமெரிக்கா தனது தூதரகத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது.
தாலிபான்கள் “எல்லா பக்கங்களிலிருந்தும்” வருவதாக மூத்த அதிகாரி அதிகாரி ஒருவர் கூறினார், ஆனால் கூடுதல் விவரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆப்கானிஸ்தான் அதிபர் அரண்மனையிலிருந்து வெளியிடப்பட்ட டிவிட்டர் பதிவில், காபூலைச் சுற்றியுள்ள பல இடங்களில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது, ஆனால் பாதுகாப்புப் படைகள் ஒருங்கிணைந்து நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel