
கடந்த 2017-ம் ஆண்டு முதல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இந்த வருடம் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக் பாஸ் 5 அக்டோபர் மாதத்துக்கு தள்ளிப் போயிருக்கிறது.
தற்போது அதற்கான ப்ரோமோ ஷூட்டிங் நடைபெறும் இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் மநீம சார்பில் போட்டியிட்ட கமல் உட்பட யாரும் வெற்றி பெறாததால், அவரே மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் எனத் தெரிகிறது.
https://www.instagram.com/p/CSVnkDRBwxN/
Patrikai.com official YouTube Channel