சென்னை: தமிழக அரசின் 20201-22ம் ஆண்டு நிதிநிதி நிலை அறிக்கை ஆகஸ்டு 13ந்தேதி தாக்கல் செய்யப்படும் என செய்தி வெளியான நிலையில், தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்டு 13ந்தேதி தொடங்கி செப்டம்பர் 21ந்தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று, முதல் நிதிநிலை அறிக்கை வரும் 13ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. முன்னதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (ஆகஸ்டு 9ந்தேதி) கடந்த 10ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நிதி நிலைமை எவ்வாறு இருந்தது என்பது குறித்து விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் வரும் 13ந்தேதி தமிழக சட்டப்பேரவை கூடுவதாக தமிழக சட்டசபை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, ஆகஸ்டு 13ந்தேதி முதல் செப்டம்பர் 21ந்தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும், வரும் 13ந்தேதி 2021-22ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், அதன்பிறகு சட்டமன்ற அலுவல் ஆய்வுகுழு கூடி சபையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.