சென்னை:
சென்னையில் நீர்நிலைகளுக்குச் செல்ல மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

இதுகுறித்து மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்டவற்றிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி சென்னை திருவான்மியூர் முதல் எண்ணூர் வரையிலான கடற்கரை, நீர்நிலைகளுக்கு செல்லவும் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.